Monday, August 09, 2010

Come September 24!

சென்ற சனி, ஞாயிறு மாலையை 'எந்திரன்-இசை வெளியீட்டு விழா' தின்று விட்டது!


ரஜினி உரை-யோடு எனக்குப் பிடித்தவை...

-'ஷங்கர் ஸார்! நடிப்பையே பொழைப்பா வெச்சிகிட்டு இருக்கறவங்களுக்கு சான்ஸ் குடுங்க; பொழுதுபோக்கா நெனச்சு வந்து நடிச்சிட்டு போறவங்களுக்கு குடுக்காதீங்க!' - தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் திரு ராதாரவி அவர்களின் பஞ்ச்!

-ரஜினி பாடல்களுக்கு சிம்பு ஆடியது; அச்சு அசலாய் அந்தந்த பாடல்களுக்கு ரஜினியின் மூவ்மெண்ட் எப்படியோ அப்படியே ஆடியது ஆச்சரியம். நமது சென்னை வாசகர் திரு சௌமி அவர்கள், 'விண்ணைத் தாண்டி வருவாயா' பார்த்தபின் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது 'சிம்பு-விற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; முயன்றால் கமல் அவர்களின் இடத்தைத் தொட முடியும்!' - (வசூலைக் குவித்த டி.ஆர் அவர்களின் இன்றைய நிலை?!)

-இயக்குநர் ஷங்கர் அவர்கள் காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு ஒருவர் பெயரையும் விடாது உச்சரித்து, நன்றி கூறியது.

-இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் ஹைலைட் காமெடி 'என்னை எதுக்காக கூப்டாங்கன்னு தெரிலை; ஒருவேளை விஜய்யோட அப்பாங்கறதாலேயோ?!'

-shaolin monk-களின் சாகஸ நடனம்!

-நடிகை ஐஸ் அவர்களின் ஆங்கிலப் புலமை கலந்த பேச்சு; மொழியின் ஆளுமை மற்றும் விஷய ஞானம் அடேங்கம்மா! உடுத்தியிருந்த உடையும் 'அடடே'ங்கம்மா! (ஏனோ 'அச்சுபிச்சு' ஸ்ரேயா பேச்சு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைத்தது!)

-முத்தாய்ப்பாக ரஜினி...! 'உச்சியிலிருந்து இறங்கி வந்தாதான் நிம்மதி...சந்தோஷம்' என்கிற ஒரே வரியில் ஓராயிரம் அர்த்தங்கள்!

ஒரு முக்கிய பின் குறிப்பு!

'எந்திரன்' ரிஸல்டை விட ஷங்கர் அடுத்துச் செய்யப்போவது என்ன?!

இந்தியனின் துவங்கி (ஜீன்ஸ் நீங்கலாக) எந்திரன் வரை ஷங்கரின் கதை/திரைக்கதை மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களைச் சார்ந்தே இருந்தன. எந்திரனின் கதை வசனம் கூட 90 சதவீதம் சுஜாதா எழுதிவிட்டதாகத் தகவல். 3 idiots என்கிற காவியத்தைத் தமிழில் தழுவி, இயக்கப்போவதாகத் தகவல் கசிந்தாலும், ஷங்கரின் இனி வரும் படங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. சுஜாதா இல்லாத ஷங்கரைப் பார்க்கப்போவதும் நிறையவே சுவாரஸ்யம்.

1 comment:

இன்றைய கவிதை said...

எடிட்டர் சார்

நல்ல ரெவ்யூ , நானும் ரசித்தேன் , ரஜனியின் பேச்சு ஒரு முத்தாய்ப்பூ.

எங்கே போனாலும் கிழே இறங்கித்தான் ஆரம்பிக்கனும்னு சொன்னது மிக்க உண்மை அது தான் நாம் ஆங்கிலத்தில் unlearn, unwindனு சொல்றதோ...

மொத்த்தில் எந்திரன் ஆரம்பத்திலேயே அசத்தல் trailer பார்த்தப்பின் எனக்கு என்னவோ இது சிவாஜியையும் மிஞ்சி விடும் என்று தோன்றுகிறது...
நன்றி
ஜேகே