Wednesday, December 29, 2010

திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - 1

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - எழுதும்படி பருப்பு ஆசிரியர் ஆணை இட்டிருந்தார். 4 (அ) 5 முறை call பண்ணி....2011 க்குள் வருமா என கேட்டு சலித்து விட்டார். "phone பண்ணிணா நல்லா பேசு.... எழுது னா... எழுதாத...ன்னு திட்டு வாங்கி...பின்....திரை 2010.....

தமிழ் சினிமாவோ...இந்திய சினிமாவோ..உலக சினிமாவோ...சில நியதிகளும்... விதிகளும்....சினிமா என்னும் மொழிக்கு...பொதுவானது தானே?!

என்னை பொறுத்தமட்டில் தரமான... தரமற்ற..வசூல் செய்த..வசூலாகாத...வரவேற்பு பெற்ற...பெறாத... என பிரிக்காமல்... ஒரு பொதுவான கருத்தாக எழுத நினைத்தேன். (Disclaimer:கருத்து தனி நபர் சார்ந்தது*).

தெலுகு சினிமா

கடந்த வருட (2009) Block Busters அருந்ததி, மகதீரா, ஆர்யா-2 இவற்றோடு ஒப்பிடுகையில்..2010 Super Hits குறைவு தான்.

வேதம், ப்ரஸ்தானம் - வித்தியாசமான களம். இரண்டிலும் Multistar cast இருந்தாலும், வேதம் - Hit க்கு காரணம் Stars in a different outfit.

அல்லு அர்ஜுன் - வருடு, அனுஷ்க்கா - பஞ்சமுகி, மனோஜ் - ஜும்மன்டி நாதம் (K. ராகவேந்திர ராவ்) அவ்வளவு நல்லா போகல.

அதிருஸ், கோலிமார் - மாமூல் மசாலா. Minimum guarentee movies.
இப்போ ப்ருந்தாவனம் - கொஞ்சம் family சாயல் - பொம்மரிலு மாதிரி.

ராஜ் மெளலி - சுனில் combo மரியாத ராமண்ணா above average type.

ரக்த சரித்ரா 1 & 2 - Hit க்கு காரணம் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் திரைக்கோணம் - factionism in RGV's angle - அதிகமான Emotional / Bloody Violence - A mixed screen play of political with family vengence - since nobody knows what was the exact reason behind the incidents and since it is a contemprary movie - ங்கறதுனால யாரையும் குற்றம் சாட்ட முடியாது. அந்த time ல அவங்க அப்படி முடிவு எடுத்தாங்கன்னு மேம்போக்கா சொல்லியிருக்காங்க. AP ல film பத்தின news / conflicts and interviews media-ல continuous ஆ இருக்கறமாதிரி பாத்துக்கிட்டாங்க. (Both versions not suitable for children, ladies and persons who want to see comedies).

சிம்ஹா - ஒரு முக்கியமான படம் - "நன்தமுரி பாலையா" வுக்கு - 7 (அ) 8 வருடங்களுக்கு அப்புறம் ஒரு mega hit னா சும்மாவா... - "அவங்க எல்லாம் நீச்ச மானவங்க.." , "Record பண்ணறதும் நாங்க தான்.. அத break பண்ணி புது Record பண்ணணும் னாலும் நாங்க தான்" என்பதுபோல் dialogues வேறு... மனுஷன் பின்னிட்டார் போங்க... அடிமட்ட ரசிகர் / TDP தொண்டனுக்கு இத விட வேறு என்ன வேணும்? நெல்லூர் ல பக்கத்து கிராமங்களில் இருந்து லாரிகள்ல வந்து படம் பாத்ததா கேள்வி.

பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட "கொமரம் புலி", "கலீஜா", "ஆரஞ்ச்", அவ்வளவு நல்லா போகல.

தெலுகு திரையை பொறுத்தமட்டில், 4 குடும்பங்கள் தான் ஆட்சி. நன்தமுரி (NTR), அக்கினி (ANR), Dr. Rama naidu (வெங்கடேஷ்) மற்றும் சிரஞ்சீவி (Geetha arts). ஒவ்வொரு குடும்பத்திலும் - 3 அ 4 ஹீரோக்கள், தயாரிப்பு நிறுவனம், இவங்க சொல்லி கேட்கிற Directors and Distributers ங்கிற மாதிரி.

எந்த ஒரு month லேயும் இவங்க படங்கள் சுமார் 1500 (AP only) theaters-ல ஓடிக்கிட்டிருக்கும். அப்படினா மத்த படங்கள்? - நல்ல தியேட்டர் கிடைக்கிறதே கஷ்டம் னா compete பண்ணறது எவ்வளவு கஷ்டம்?! இந்த விஷயம் பத்தி "தாசரி நாராயண ராவ்" கூட ஒரு interview ல சொல்லிருந்தாரு.

ஹீரோக்கள்ல ரவி தேஜா, பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லாரி நரேஷ் பாப்புலர்ங்கரதும், Directors ல EVV சத்திய நாராயணா, K ராகவேந்திர ராவ், தாசரி, திருவிக்ரம், பூரி ஜகன்னாத், குணசேகர் போன்றோர்க்கும் நல்ல opening இருக்குனாலும், hit என்பது depends-ஆக உள்ளது.

நிறைய new people ( both technical and acting sides) வந்து கொண்டு இருக்காங்க னாலும் இன்நிலை மாறுவதற்கு சில வருடங்களாகலாம்.மாறும் என நம்புவோமாக...

No comments: