Thursday, August 18, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 13

'பட்டாக்கத்தி பைரவன்' படத்தில் தப்பித்தவறி விழுந்த நல்ல பாடல். கண்ணதாசன் எழுத்து, ராஜா அவர்களின் இசை (வரிகளுக்கு நடுவே சற்று உன்னிப்பாய் கவனியுங்களேன்!), எஸ் பி பி / ஜானகி அவர்களின் ஹம்மிங் உயர்தரம். இவ்வளவு இளமையாக கவிஞர் கண்ணதாசன் 1979-ல் எழுதியிருப்பது ஆச்சர்யம். இந்தப் பாடலுடன் பதிவைத் துவங்குவோம்.


காதல் பாட்டு எப்படி இருக்க வேண்டும்? இளமை, இனிமை, துள்ளல், இசை, மென்மை....எல்லாம் கலந்து ராஜா இசையமைத்த பாடல் 'கண்மணியே, காதல் என்பது...' கவியரசு அவர்களின் வளமையை நினைக்கத் தூண்டுகிறது!


இந்தப் பாடலை யாரால் மறக்க முடியும்? 'அன்பே சிவம்' என்றால் 'அன்பே காதல்'-ம் தானே?! விஜய் பிரகாஷ், சாதனா சர்கம் குரல்களில், வித்யாசாகர் இசையில், வைரமுத்து வரிகளில் 'காதல் பூ வாசம்' எங்கும் பரவி, விரவிக் கிடைக்கிறதல்லவா?!


இதைக் கேட்டு உருகாதார் யார்? இவ்வளவு சின்ன வயசில் இத்துணை அழகான இசையா? ஜி வி பிரகாஷ் இசையில், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா ஜோடி (எவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறார்கள்!) முத்துக்குமார் வரிகள் வெய்யிலில் விளையாடினாலும், தென்றல் வந்து தழுவிய ஃபீலிங்!


இந்தப் பாடல்களில் 'காதல்' தாண்டிய பொதுவான ஒரு அம்சம் உண்டு. என்னதான் அது? பின்னூட்டம் போடுங்கள். அடுத்த பதிவில் சொல்கிறேன் :-)

1 comment:

Anonymous said...

The lovers in all these songs do not end up marrying each other!!!! Meaning Failed Love!!! Itha thaavira enakku yosikka theriyila!!