Thursday, September 08, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 2


இனி....

'போதுமா முத்தம்'? அதுவும் நம் கமலுக்கு??! புதுமுக ஷோபனாவுடன் இரவில், வெளியிலா/உள்ளிலா என யூகிக்க முடியாத தளத்தில், இளையராஜா இசையில் எஸ் பி பி, ஜானகி பாடிய பாடலில் 'போதாதே, முத்துச்சரம், நாணுமே, விதிவிலக்கு, காமம் வண்டு' எனச் சரளமான வார்த்தைகளில் வரும் 'சத்தம் போடாத முத்தம்'...அந்நாளைய தொலைக்காட்சியில் 'சென்சார்' செய்யப்பட்டாலும், 'சப்பக்' பாடல் நான்கில்....ரசம் சற்றுக் 'சப்'தான்!


சாதாரணமான கமல், 'பால் நிலா ராத்திரி, பாவை ஓர் மாதிரி' என்று அழைத்தால் 'சுஸ்த்'தாகி...'அழகு ஏராளம்...' என்று பின்னாடியே வந்துவிட மாட்டாரா...?! தர்மாவதி ராகத்தில்...இளையராஜாவின் கொஞ்சும் இசையில்...எஸ் ஜானகி, எஸ் பி பி குரல்களில்....'மீண்டும்...மீண்டும் வா' என்று டிம்பிளை அழைத்துக் 'கதாநாயகியாய்'த தொடங்கி வைத்தது...இன்று 'வடக்கு இறக்குமதி'யைச் சர்வ சாதாரணமாக்கிவிட்டது...! 'சரசக்கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது' என் வரிகள் சொன்னாலும்....'பச்சக்' ஐந்தாகிவிட்டதே ராஜசேகரய்யா..!.


'என்ன சத்தம் இந்த நேரம்?' என்கிற அதட்டலான தொனி கூட 'மன்னர்' கமலின் நடிப்பில் மென்மையாகி, நம்மைப் 'புன்னகை' க்க வைக்கிறதை நினைத்தால்....அடடா! கடலோரக் கவிதையுடன், பொங்கும் அருவியின் பின்னணியில், தாலாட்டும் இசையில், எஸ் பி பி மென்மையில்....கமலின் குரலினூடே அமைந்த இந்தப் பாடல்....'நெருக்க்க்கக்' காதலர்களுக்கு என்றும் பொருந்தும், கமல் ஸாருக்கு மட்டுமே அமையும் 'பச்சக்' பாடல் ஆறு...!



-'பச்சக்' தொடரும்!

No comments: