Friday, September 09, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 18

ஒரு இடைவேளைக்குப் பின், அன்பு நண்பர், சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவில் இருந்தபோது (நிலைமையைப் பாரு!), மனிதர் ஒரு அட்டவணையை வைத்துக்கொண்டு முன்னிரவில் அழைத்து பேசத் துவங்கினால்.... பின்னிரவு வரை நீளும். அந்த வாய்ப்பு அயல் நாடு வந்தவுடன் பறிபோய் விட்டது!

ரொம்பவே குற்றஞ்சாட்டினார். 'ரஜினி இன்ட்ரோ சாங்...ஆரம்பிச்சு 5 வரைக்கும்வந்து நிப்பாட்டிடீங்க ..அப்பாலிகா...சிங்கர் சுஜாதா... இப்ப.. பச்சக்...சப்பக்... ஊடால...சம்பந்தமே இல்லாம சினிமாப் பாட்டு போட்டு கேள்வி வேற.. நடுவுல காஃபி... மோகம் , ஈர்ப்பு, சிருங்காரம் ...வேற 'ரச'ங்கல்லாம் அனுபவிக்கறதில்லையா? (யோவ், இன்னொஸன்ட் ரசம் பத்தி மூச்சு விட மாட்டீரே!)..ஆக மொத்ததுல haphazard-ஆ இருக்கு...'

'சரி, நீங்கதான் எழுதுங்களேன்...' என்றேன் அப்பாவியாய்...மனிதர் சைலண்ட்!

Haphazard மீனிங் பாப்போமா? (வுடு ஜூட்-ஆ?! அப்போ straightaa மேட்டர்தான்!) இருந்தாலும்... கடோசி-1 போனீங்கன்னா மீனிங் பாக்கலாம்!

யோசித்தால் அப்பிடித்தான் நான் நெச வாழ்க்கையிலும் இருக்கிறேன் என்று தோன்றுகிறது. அமெரிக்கா (சொல்ல வேண்டாமா பின்னே?!) வந்த புதிதில்....ஆன்லைன் சினிமா பார்த்துத் தீர்த்தேன்...நூலகத்துடன் போராடி கொஞ்ச நாள் படித்துப் பார்த்தேன்....பண்பலை வரிசையில் சில வாரங்கள்...எதுவுமே இல்லேன்னா முகப்புதகம்...சில நாட்கள் வேலை பிய்த்துப் பிடுங்கி, போராட்டம்....எதாவது எழுதியே ஆணும்னு பாட்டு வெச்சி எழுதி....(வித்தியாசமாய் இருக்கட்டுமேன்னு மோகம், ஈர்ப்பு, சப்பக்-னு எடுத்ததால அது வில்லங்கமாயிட்டது!) அப்பப்போ நண்பர் / புலவர் / வாசகர் / கவிஞர் ஜே கே-வ டபாய்ச்சி கவிதை கூட ட்ரை பண்ணேன் ...மோகன் சொன்னாரேன்னு 'சுஜாதா' பாட்டுல விழுந்து கெடந்தேன்....கோஸ் கூட்டு / பொரியல், சே கிழங்கு / வெண்டை / பாகல் பொரியல், பருப்பு ரசம் / சாம்பார், பெஸ்டிவல் டேஸ்ல சேமியா / பருப்பு / பால் பாயசம் (அட நெசம்மா!) ....சமைச்சும் பார்த்தேன்...


ரொம்பவே போரடிச்சு 'ஆடி'யும் பார்த்தேன்...! ஆக, ஒரு 'கெரகம்' மாதிரித்தான் கெடக்கேன்!


எல்லாரைபோல 'சீரியல்', 'சிங்கர்'னு விழுந்து கெடக்காம, எத்தையோ புடிச்சிகிட்டு அலையாம ..இன்னாத்த தேடி அலையுறேன்?! நாயகன் இஷ்டைல்-ல சொல்லோணும்னா 'தெர்லியே?!' என்னிய மாதிரி வோர்ல்ட்ல எத்தினி பேரு கீறாங்களோன்னு தெர்லியே?! இப்டியே தேடிக்கினு இருந்தா முடிவுதான் இன்னா? அதுவும் தெர்லியே?!

திருப்பி கமலாண்டையே போவோம்... 'அனுபவிக்கோணும்...ஆராயப்படாது...' - ஒரு வேளை இதத்தான் செய்யுறேனோ நானு?!!

கடோசி - 1

haphazard (adjective)

a) lacking any obvious principle of organization

b) characterized by lack of order or planning, by irregularity, or by randomness; determined by or dependent on chance; aimless.

c) disorganized, unsystematic, careless, slapdash, helter-skelter

d) வேண்டாவெறுப்பாக,கண்டபடி, தற்செயலாக, ஒழுங்கீனம், தலைகீழாக, முன் பின் யோசிக்காது

எல்லாம் 'சிக்கு'னு போட்ட சொக்கா மாதிரி பொருந்துது பாத்தீங்களா?! இத்த எழுதும்போது கூட அப்டிதான்...வரைட்டி ரைஸ் மாத்ரி வரைட்டி லாங்குவேஜ்-ல எழுதிகீறேன்!

கடோசி கடோசியா - 1

கொஞ்சம் ஃபோட்டோ-வை உத்து, கரீட்டா பாத்தீங்கன்னா மாட்டரு தெர்யும்... என்னவா... அதாம்பா... ஷட்டர் மேல Haphazard Furor-னு அச்சடிச்சாபுல கீதேப்பா...அதேதான்! அம்புட்டுதான்! சாணி எடுத்தாந்து அப்றதுக்குள்ள...நெசம்மாவே வுடு ஜூட்!

No comments: