Friday, November 04, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 31

இன்று பலரும் ஏளனமாய்ப் பார்க்கும் டி ஆர், 'அன்று' தேர்ந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்பது எத்துணை பேருக்குத் தெரியும்....? அவரும், பாலு சாரும் சேர்ந்தால்...நிச்சயம் 'ஹிட்'தான்...!

'வாசமில்லா மலரிது' என்று துவங்கும் டி ஆர் / பாலு கூட்டணி என்றும் பசுமை / இளமை / இனிமை. பாலு 'அடக்கி' வாசித்த பாடல் என்று வைத்துக்கொண்டாலும், டி ஆரின் இசை / வரிகள் நம்மை ஈர்த்து, ('மாதங்களை எண்ண பனிரெண்டு வரலாம், உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட?' ) , 'ஒன்ஸ் மோர்' கேட்கத் தூண்டும்...!


இரவில் விளக்கணைத்து, கேட்கக் கூடிய பாடல்களில் நிச்சயம் இந்தப் பாடல் உண்டு. 'மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூது விட்டேன்' என்று எழுதியவனின் ரசனை எத்துணை உயர் ரகமாய் இருந்திருக்க வேண்டும்? இதை பாலுவிடம் கொடுத்தால்? 'பின்னி பெடல்' எடுத்து விட மாட்டாரா? கேளுங்கள்...இரவில் விளக்கணைத்து, முடிந்தவர்கள் உங்கள் மனதிற்கு இனியவரையும் அணைத்துக்கொண்டு கேளுங்கள்...


டி ஆர் / பாலு 'அதகளம்' செய்த பாடல் இது. துள்ளல் இசைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாலு பாடியிருப்பதை வரிகளில் எழுதிவிட முடியுமா? பாட்டைக் கேட்கக் கேட்க, பார்க்கப் பார்க்க, நம்மை அறியாமல் மனது லேசாவதை உணர முடியும்...ஜானகியம்மா, சரிதா added advantage...


'தக்கத் தகதிமி' என்று பாட்டு நடுவில் வந்தாலே 'கிளாசிக்கல்'பாட்டுப்பா!' என எண்ணும் சாதாரண மனித ரகம் நான். 'சலங்கையிட்டாள் ஒரு மாது' பாடலில் பெண்ணை மிக அழகாக வர்ணித்து எழுதியதை, பாலு தமக்கே உரிய கம்பீரத்தோடு பாடியதை மறக்க முடியுமா...பாடல் வரிக்கு ஏற்றார்போல அறிமுக நாயகி 'அமலா' நாட்டியம் ஆடியதைத்தான் மறக்க முடியுமா? பிடியுங்கள், 'கிளாசிக்கல் சாங்' டி ஆர் / பாலு கூட்டணியில்...!

3 comments:

பால கணேஷ் said...

டி.ஆரின் மெலடிகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். பாலு-டி.ஆர் காம்பினேஷனை ரசனையுடன் தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி.

shankar said...

உன்னுடைய பதிவுகள் வாசகர்களை பின்னோக்கி இழுக்கின்றன, இளமை திரும்புகிறது. இந்த ஒரு காரணத்துக்காகவே, நன்றி,நன்றி,நன்றி!!!

Manimaran said...

NICE