Monday, April 02, 2012

எம்.ஆர்.ஆர்.வாசு

பட உலகில் பெரும்பான்மையானவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள்.  ஆனால், வேலை நேரத்தில்அதைதொட மாட்டார்கள்.  சிலருக்கு நாள் முழுதும்அதுஇல்லாமல் இருக்க முடியாது.  அதில் ஒருவர்தான் எம்.ஆர்.ஆர்.வாசு.

சின்ன அண்ணாமலை பழுத்த காங்கிரஸ்காரர்.  நல்ல நகைச்சுவைப் பேச்சாளர்.  சிவாஜி ரசிகர் மன்றங்களின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து, சில படங்களையும் சொந்தமாக தயாரித்து வந்தார்.


 


சிவாஜி, கே ஆர் விஜயா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து  படம் எடுத்துக்கொண்டிருந்தார்.  வாசுவும் அதில் உண்டு.

சிலர் பெரிய பெரிய செலவுகளை எல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்து விடுவார்கள்.  சின்னச் செலவுகளுக்கு யோசிப்பார்கள்.  அந்த வகையைச் சேர்ந்தவர் சின்ன அண்ணாமலை.

படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு.  சிவாஜி உட்பட அத்தனை நட்சத்திரங்களும் சீனில் உண்டு.  ஒரே ஷாட்டில் சுமார் 300 அடி தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய உருக்கமான காட்சி. 

வாசு, மேக் அப் ரூம் போய், தான் வைத்திருந்த விஸ்கியைத் திறந்து, கலக்க தண்ணீர் தேடினார்.  கிடைக்கவில்லை.  செட் பாயிடம் சோடா கொண்டு வரச்சொன்னார்.  பையனைக் காணவில்லை!  சிறிது நேரம் காத்திருந்து, வெளியில் வந்து வேறொரு பையனை அழைத்து சோடா வாங்கி வரும்படிச் சொன்னார்.


அந்தப் பையன் நேராக தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலையிடம் நடந்த்தைச் சொன்னான்.  கண்டுக்காம போஎன்று பையனுக்கு உத்தர்விட்டு பேசாமல் உட்கார்ந்து கொண்டார்.

ஒரு சோடாவுக்குக் கூட வக்கில்லாத பசங்களெல்லாம் சினிமா எடுக்க வந்துட்டாங்கப்பாஎன்று முணுமுணுத்துவிட்டு, விஸ்கியை அப்படியே குடித்துவிட்டு செட்டுக்கு வந்துவிட்டார் வாசு!

இயக்குநர் ஸ்டார்ட் சொன்னவுடன் திட்டமிட்டபடி காட்சி படமாகிக் கொண்டிருந்த்து.  இறுதியாகப் பேச வேண்டிய வாசு, இல்லாத வசனத்தைச் சொல்லிவிட்டார்.  அடுத்த டேக் எடுத்தார்கள்.  வாசு சொதப்பினார்!

நான்கு டேக் வீணானவுடன், சிவாஜி வாசுவை முறைத்துஎன்னப்பா வாசு, ஓவரா?!’ என்றார்!  வாசு அசட்டுச் சிரிப்புடன்இல்லண்ணேஎன்றார்!  இப்படியே வாசுஆடியதில், ஒன்பதாவது டேக் .கே. ஆனது.

1000 அடி கொண்ட ஒரு ரோல் நெகடிவ் விலை அன்றைய நிலவரப்படி சுமார் ரூ 3,000.  காட்சி, படமாகி முடிய 3 ரோல்கள் செலவாயினஆக செலவு ரூ 10,000.

படப்பிடிப்பு முடிந்த்தும் வாசு, சின்ன அண்ணாமலையைக். கூப்பிட்டுஅண்ணே! என்னால நிறைய ஃபிலிம் வேஸ்டாயிட்டதுஎன்றார்.  சின்ன அண்ணாமலைக்கு வருத்தம் கலந்த கோபம்.  ஒன்றும் பேச முடியாத சூழ்நிலை.
 
 
ஒரு ரூபாய்க்கு சோடா வாங்கிக் கொடுத்திருந்தால், பத்தாயிரம் ரூபாய் மிச்சம் பண்ணிருக்கலாமே ஸ்வாமிஎன்று போடு போட்டுவிட்டு, போயே போய் விட்டார் வாசு!

-மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள், திரு மின்னல், நர்மதா வெளியீடு

No comments: