Wednesday, April 04, 2012

பெரியசாமித் தேவர்!

கமலின் தந்தை பெரியசாமித் தேவர் கேரக்டரில் சிவாஜி கணேசனை நடிக்க வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல் என்று விஜயகுமார் எஸ். வி. ரங்காராவ் ரேஞ்சுக்கு கம்பீரமும் உருக்கமும் காட்டிபுதிதாகநின்றார்.  அவருக்கும் அதிக ஆதரவு இருந்தது.  எஸ் எஸ் ராஜேந்திரன் மண்ணின் மைந்தர்.  அவரும் பரிசீலிக்கப்பட்டார். 

கமல், சிவாஜியை நாடிச் சென்றார்.  அவரது மேக்-அப் பாக்ஸில் தூசி படிந்திருந்தது.  உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் விலகிப் போயிருந்தார்.

பொள்ளாச்சி வரைக்கும் அப்பாவால வர முடியும்னு தோணலை.  ரெஸ்ட்ல இருக்கார்.  டாக்டர்ஸ் அட்வைஸ்படி விசிட்டர்ஸ்கூட குறைச்சிட்டேன்.  ஃபேன்ஸும் வர வேண்டாம்னு சொல்லியாச்சி’ – ராம்குமார் நிலைமையைச் சுட்டிக் காட்டினார்.  கதையைக் கூறி கணேசனை சம்மதிக்க வைத்துவிட முடியும் என்று கமலுக்கு தோன்றியது.

கமல் தேடி வந்ததில் சிவாஜிக்கு மகிழ்ச்சி.  சிவாஜி என்கிற சிங்கத்துக்கு எல்லோரும் தயிர் சாதமே வைத்து சாகடித்து விட்டார்கள்என்று சொல்லிக்கொண்டேயிருக்கும் கமல், கொண்டு வந்திருந்த மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பிரியாணியைப் பரிமாறினார்.  கணேசன் கவனமாகக் கேட்டார்.

அடடா! அப்படியா கதை? ஃபஸ்ட் ஆஃப்ல விட்டுட்டு, நீ செகண்ட் ஆஃப்ல ஸ்கோர் அடிக்கப் பாக்குறியா? கெட்டிக்காரன்டா நீ! ’ செல்லமாக கமலைத் தட்டிக் கொடுத்தார் சிவாஜி.

பொள்ளாச்சியில் தேவர் மகன் ஷுட்டிங்.  திருவிழா போல நடைபெற்றது.  .வே.சிவகுமார் தேவர் மகனுக்கு உதவி இயக்குநர்.  சிவாஜியைக் கண்டு யூனிட் திகைத்ததுசிவாஜி இத்தனை சிரமப்படறாரே!’

முதல் காட்சி பஞ்சாயத்தில் நாசர், கணேசனை அவமானப் படுத்தும் கட்டம்.  கணேசன் மனம் உடைந்து கமலிடம் கோபமாகப் பேசிக்கொண்டே வேகமாக நடக்க வேண்டிய ஷாட்.

என்னமோ இதும்பாங்களேஎனக்கும் அப்படியொரு வேலை கொடு என்கிறார்ப்போல வசனம் பேசிமாவாட்டுவதுமாதிரி பாவனை காட்டிஒரே டேக்.



ஆக்ஷன்என்றதும் பெரியசாமி தேவர் பிரசன்னமாகி விட்டார்.  நடிப்பு அகராதியின் அனைத்துப் பக்கங்களும் தெரிந்தன.  .வே.சிவகுமார் கண் கலங்க நின்றார்.  சகலரும் வாயடைத்துப் போயினர்.

டேய் கமலா (கமல்ஹாசனை சிவாஜி அழைக்கும் விதம்) நான் பண்ணுனா ஓவர் ஆக்டிங் அப்படிம்பீங்க.  நாலஞ்சி விதமா செஞ்சிக் காட்டறேன்.  எது வேணுமோ எடுத்துக்க.’

நாற்காலி தேடினார்கள்.  பெரியசாமி தேவர் அமரும் சிம்மாசனம் கிடைக்க அல்லோலகல்லோலப் பட்டது சிங்காநல்லூர்.  ஏறக்குறைய முக்கால் மணி நேரப் பரபரப்பு.  பிறகே கணேசன் உட்கார்ந்தார்.  அவரைப் போன்ற கம்பீரமானதொரு நாற்காலியில்.
மொத்தம் ஏழு நாட்கள்.  கணேசன் பெரியசாமித் தேவராக உலவினார்.

தேவர் மகனுடைய வெற்றிக்கு அதனுடைய மண் வாசனையும் காரணம்.  சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கும்.  அப்பா, பிள்ளையோட பேசற விதம்இதெல்லாம் வேரூன்றிப் போன விஷயம்.  யார் யார் எந்தத் தொனியிலே, உச்சரிப்பிலே பேசணும்னு எனக்குத் தெரியும்.  நான்தான் முடிவு பண்ணினேன்.  ஒரு நிர்பந்தத்துல ஏழரை நாள்களில் கதையை எழுதி, வசனமும் எழுதினேன்.’ – கமல் தன் நேர்காணல்களில் கூறியவை.

-கமல், பா தீனதயாளன், கிழக்கு பதிப்பகம்

1 comment:

Anonymous said...

இதுவரை கேள்விப்படாத விசயம் இது..

நன்றி.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/