Saturday, April 28, 2012

அத்தியாயம் மூன்று : மைசூர் மஹாராஜா


பெங்களூர் பரபரப்பில் பழகியிருந்த என்னை மைசூரின் அமைதி ஆச்சரியப்படுத்தியது. பெங்களூரில் அம்மும் கூட்டம்/நெரிசல், கொஞ்சம் தாண்டினால் குறைந்து, காணாமலேயே போய்விடுகிறது.  பெங்களூர் – மைசூர் ரூட்டும் அப்படித்தான். 

அந்தப் பெண்கள் கல்லூரி 1970-ல் துவங்கப்பட்டு, இன்றும் வெற்றிகரமாய் இயங்கி வருகிறது.  B.Sc., B.BA., B.Com., B.A போன்ற இளநிலை படிப்புகளும், M.A., M.Com., போன்ற முதுநிலை படிப்புகளும் கொண்ட கல்லூரி.  ரயில் நிலையத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் ஸரஸ்வதி புரத்தில் சாதுப்பசுவாய் இருந்தது.  ஆட்டோவில் போய் இறங்கினேன். 

இந்தக் கல்லூரியில்தான் ஆன்லைன் கேள்வி-பதிலில் தேர்ச்சியாகி, தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பெண்களை தேர்வுக்கு (?!) உட்படுத்தி, தெரிவு செய்ய வேண்டும் :-)

எல்லாப் பெண்களின் பிறந்த தேதி 1991-ல் இருந்தது.  அதே போல், எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் சேத்தன் பகத்!

அதென்னமோ தெரியவில்லை, சேத்தன் பகத்துக்கும் ‘ஃபிகரு’ங்களுக்கும் அவ்வளவு தொடர்பு இருக்கிறது.  இருக்காதா பின்னே?

5 point someone
1 night at call center
3 mistakes in my life
2 States
Revolution 20-20

என எல்லா புதினங்களின் தலைப்புகளைப் பார்த்தாலே புரிந்து போகும். இதனால்தானோ பெண்களுக்கும் அவரைப் பிடித்துப் போகிறது போலும்!

(நேரில் பார்த்தால் சேத்தனிடம் கேட்க வேண்டியது…

1. ஆண்-பெண் இணைந்து வாழ்தல் (living together) 
2. திருமணத்திற்கு முந்திய உடல் ரீதியான உறவு அங்கீகரிக்கப்படுவது

வொய் சேத்தன் ஸார்?!). 

கொஞ்சம் நோண்டினால் பலருக்கு ஐந்து புள்ளிகளைத் தாண்டி பெயர்கள் தெரியவில்லை.  ஒரே பெண் மட்டும் மூன்று தவறுகளைச் சிலாகித்து, ‘நம்ம லைஃப்ல நடக்கற மாதிரியே எழுதறார் ஸார்’ என்றது!

‘சேத்தன் பகத்’ஐப் போட்டுக்கொள்வது, ஸல்வார் போடுவது போல, பிட்ஸா சாப்பிடுவது போல, ‘காலத்தின் கட்டாயம்’ போலும்.

இப்படி ஒட்டு மொத்தமாய் எல்லாரையும் ‘கொள்ளை’ கொண்ட சேத்தன் பகத் இந்த அத்தியாய  ‘மைசூர் மஹாராஜா’!

1 comment:

தக்குடு said...

ஹலோ, இந்தியா வந்துட்டு போனேளா?? அடியேன் ஆகஸ்ட்ல போகலாம்னு இருக்கேன். அந்தசமயம் வந்தா ஒரு மெயில் போடுங்கோ! :)