Friday, May 04, 2012

அத்தியாயம் நான்கு: மைசூர் மசாலா தோசை

‘துணுக்’ சம்பவங்களைக் கொண்டதால் ‘மைசூர் மசாலா தோசை’ இதோ முறுகலாக….



உரையாடிய பெண்களிடம் ஆங்கிலம் பேச்சுப் பிழையில்லாமல் இருந்தது ஆச்சரியம். அதே போல, எல்லோரும் அமைதியாய் / நிதானமாய் நேர்காணலை எதிர்கொண்டதும். (மாணவிகளிடம் ஏற்கெனவே சில நிறுவனங்களின் ‘ஆஃபர் லெட்டர்’ இருக்கிறது எனத் தெரிந்தவுடன் இரண்டாவது ஆச்சரியம் ‘பணால்!)



நுனிப்புல் மேய்தல் அனைவரிடமும் இருந்த்து. கொஞ்சம் நோண்டினால் ‘ஸாரி ஸார்!’தான்.... இந்தத் தலைமுறையினரிடம் மிகப் பெரிய குறை இதுதான் (ரங்கா! நோக்கு வயசாயிடுத்துடா!).


Software development, testing என்று பெரிய வார்த்தை பேசிய பெண்ணிடம் ‘எப்படி தெரியும்?’ – ‘ஸார்! புக்ல படிச்சிருக்கேன்!’


‘C, C++’ எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிருவேன். அதனால என்னிய ஸெலக்ட் பண்ணுங்க ஸார்!’


ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்குடுப்பேன். முடிஞ்சா பண உதவி செய்வேன். அப்ப்ப்போ பக்கத்துல இருக்கற முதியோர் இல்லத்துக்கு போய் ஏதாவது பண்ணுவேன். இதெல்லாம் ஆஃபீஸுல வேலைக்கு சேர்ந்தால் செய்ய முடியுமா?’


’உங்களைப் பாத்தாலே நல்லவரு மாதிரி தெரியுது. அதே மாதிரி அந்த ஸாரும் ரொம்ப நல்லவரு’ (ரங்கா! இன்னுமாடா இந்த உலகம் உன்னிய நம்பிகிட்டிருக்கு!)



நேர்காணல் முடிந்ததும் ‘நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு…

‘ஸார்! உங்க பேரென்ன?, அப்புறமா டெஸிக்னேஷன்?’

’மேலே படிக்கணும் ஸார், முடியுமா?’

‘என்னெல்லாம் சொல்லித் தருவீங்க ஸார்?
’ஏன்?’
’சரியா சொல்லித் தந்தாதானே வேலைய ஒழுங்கா பாக்க முடியும்!’

‘நான் ஸெலக்டட்தானே?!’

‘ஸாலரி எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்று கேட்டு அதிர வைத்ததுதான் ஸுப்பர்!



அந்தப் பெண் சிரிக்காமல் ரொம்பவே ‘உம்’. இயல்புக்குக் கொண்டு வர வேண்டி காஷுவலாய்க் கேட்ட ‘are you enjoying life?’ கேள்விக்கு ‘இல்லை’ என்றது!

‘ஏம்மா?’ என்றேன்.

‘அப்பா தவறிட்டார்!’

‘அடக் கடவுளே! ரொம்ப ஸாரிம்மா, எப்போது நடந்தது?’

‘எனக்கு நாலு வயசா இருக்கும்போது!’ (வேணாம் விட்டுரு, அழுதுருவேன்!)

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

‘துணுக்’ சம்பவங்களைக் கொண்டதால் ‘மைசூர் மசாலா தோசை’ இதோ முறுகலாக.....

ரசிக்கவைத்த பகிர்வு..