Sunday, February 03, 2013

விஸ்வரூப தரிசனம் - 2

விஸ்வரூப தரிசனம் - 1 -ஐத் தொடர்ந்து இதோ ...


விஸ்வரூபம் தடை நீக்கப்பட்டதால், படத்தைப் பற்றிய என் பார்வை.

 
கமலின் முந்தைய adventures வெற்றி விழா, குருதிப்புனல், அவ்வை சண்முகி, அர்னால்டின் True Lies, ரஜினியின் பாட்ஷா - சாயல் கண்டிப்பாய் உண்டு.

அந்தக் காலத்திலேயே குமாரில பட்டர் பௌத்த மதத்தைத் தோற்கடிக்க, அவர்களிடமே போய் ட்ரெயினிங் எடுத்தது போல தீவிரவாதிகளின் கண்களைக் குத்த அவர்களிடமே ஐக்கியமாகும் கதாநாயகன் என்றால் பகுத்தறிவு வாதிகளுக்குக் கோபம் வரும். எவ்வளவு படங்களில் நாம் பார்த்து விட்டோம்? ஆஃப்கானிஸ்தான், நியூயார்க் என்கிற ஜிகினா முலாம் சுற்றி நம் கையில் வந்த பழைய சோறு.

ராஜேஷ்குமார் கதைகளில் வரும் விவேக் என்கிற புத்திசாலி scotland yard trained அதிகாரி, சர்வ நாட்டு காவல் துறைகளுக்குக் கற்றுத் தரும் திறம் வாய்ந்தவர். தமிழ்வாணன் புதினங்களில் வரும் தமிழ்வாணன்/சங்கர்லால் வெளிநாடுகளில் நடத்தும் சாகசங்கள் படிக்கச் சுவாரஸ்யமாய் இருக்கும். சிஐஏ, எஃப்.பி.ஐ-கே தெரியாத cesium bomb விவகாரம் நம்ம ஊர் ஏஜெண்டுக்கும், அவரது உயரதிகாரிக்கு மட்டுமே தெரியும் எனும்போது பாரத மாதாவுக்கு ஜே! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ரங்கநாதா!

படத்தின் கதை இந்தியாவில் இல்லை, இந்தியாவுக்குச் சம்பந்தம் இல்லை என்பதாலேயே மனம் ஒட்ட மறுக்கிறது. இரண்டாம் பாதி தொய்வு கவனிக்க வேண்டிய விஷயம். எப்படி B / C centerகளில் reach ஆகும்? dub செய்த தமிழில் ஆங்கிலப் படங்களை ரசிக்கத் தயாராகிவிட்ட மக்கள், சுத்த பிராமணத் தமிழில் அமெரிக்காவில் எடுத்த படத்தைப் பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கை போலும்.

கதக் நடனத்தில் கமலின் உழைப்பும், brilliance-ம் தெரிகின்றன. அதோடு முகத்தில் வயதான களை (சமீபத்தைய பேட்டிகளில் படத்தில் பார்த்ததை விட இளமையாக இருக்கிறார்).

படத்தில் இரண்டு கதாநாயகிகள் தேவைதானா? தேவைதான். கமல் செய்த அசைவ சாப்பாட்டை ருசி பார்க்க ஆண்ட்ரியா வேண்டாமா?. பிராமண பாஷையில் பேசித் தள்ளும் பூஜா குமார் பார்க்கப் பாந்தமாய் இருக்கிறார்.

ராகுல் போஸ் படுத்தல், ஷேகர் கபூர் கம்பீரம். போஸின் உதவியாளராய் வரும் ஜெய்தீப் அஹ்லாவத் படு இயல்பு (என் நண்பர் ஜி ஆர் ஷங்கர் ரொம்பவே இவரைப் பற்றி சிலாகித்தார்).

படத்தின் இசை, பாடல்கள், தொழில்நுட்பம் கவனிக்கப்பட வேண்டியவை.

இளைஞர்களுக்குப் படம் பிடிக்கலாம். படம் பார்த்த அலுவலக நண்பர்களிடம் பேசியதில் இது தெரிந்தது (ஆக, எனக்கு வயசு கொஞ்சம் ஆயிட்டது).

சர்ச்சையின் காரணமாய் வெற்றி விஸ்வரூபமெடுக்கலாம். Otherwise, ரொம்பவும் சாதாரண படம்.

-என் நண்பர் ஜி ஆர் ஷங்கருடன் இணைந்து எழுதப்பட்டது.

No comments: