Sunday, February 10, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 39




எடின்பரோவின் பிரின்ஸஸ் ஸ்ட்ரீட் சென்னை பாண்டி பஜார், பெங்களூர் ப்ரிகேட் ரோடு, நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் போல. சனிக்கிழமை கூட்டம் அநியாயத்துக்குப் பிதுங்குகிறது. கூடுதல் வசீகரம் ரக்பி பந்தயம்.


எடின்பரோ முழுவதும் கேஸ்ஸில்ஸ் நிரம்பி வழிகின்றன. புராதான கலாச்சாரத்தை ‘அப்பிடியே’ பத்திரப்படுத்தி வைத்திருப்பது ஆச்சரியம். எல்லாம் பனியிலும், மழையிலும் நனைந்து பச்சை/கறுப்பு நிறத்துக்கு மாறி வித்தியாசமாயிருக்கிறது.

ஜீன்ஸ், டிஷர்ட், ஸ்வெட்டர், தலைக்குல்லாய், ஸாக்ஸ், ஷுஸ், விண்டர் கோட் போட்டுக் கொண்டாலும் குளிர் ‘ஜ்லீர்’! இதெல்லாம் பொருட்படுத்தாத ஜனத்திரள் சர்வ சாதாரணமாய் நடை பழகுகிறது. ஆண் / பெண் பாகுபாடில்லாமல் புகைக்கிறார்கள்.

பிரின்ஸஸ் ஸ்ட்ரீட் வழியாகத்தான் தினமும் ஆஃபீஸ். ரொ...ம்...ப... வருஷங்களுக்கு அப்புறம் ஸிட்டியில் ஆஃபீஸ் அமைந்தது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

No comments: