பாஸேஜ் ஆஃப் இந்தியா என்கிற பஞ்சாபி வகை உணவகம்
லீத் வாக் (Leith Walk) பகுதியில் உள்ளதை முதல் நாள் நடைப் பயணத்திலேயே
குறித்துக் கொண்டேன்.
சனியன்று மதியம் 12 மணிக்குப் போனால்... திறக்கவேயில்லை. ’சரி, பக்கத்தில் குஷி'ஸ் என்கிற உயர்தர விலை உணவகம் இருக்கிறதே! அங்கு போகலாமே!’ (அட! இதை அன்னிக்குக் கவனிக்கவே இல்லையே!)
Light Lunch மற்றும் Dessert Menu வரவேற்றது. முக்கால்வாசி அசைவம் என்றாலும், Bata Rate-ல் (5 பவுண்டு 95 பென்ஸ்) தாவா வெஜ்-உடன் ’நான்’ - ஐ ஆர்டர் செய்தேன். நண்பர் சில்லி பன்னீர் + ரைஸ் (அதே விலை).
பெரீய்ய பாட்டிலில் ‘டேபிள் வாட்டர்’, க்ளாஸ்களை வைத்துவிட்டு, அப்புறம் ‘என்னடா வருமா?’ என்கிற அளவுக்குக் காக்க வைத்தார்கள்.
பக்கத்து மேஜை ஸ்காட்டிஷ் நண்பர்கள் கண்களில் வரும் நீரை டிஷ்யூவில் துடைத்துக்கொண்டு, சிக்கனையோ, மட்டனையோ துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள்.
வந்த ஐட்டம்களின் அளவுகளைப் பார்த்தபோது ‘பத்துமா?’ கடோசியில் நாங்கள் இருவர் வயிறு நிறைய சாப்பிட்டும் கொஞ்சம் மீதம் இருந்தது! ’நான்’ மென்மையாகவும், அரிசி நம்மாத்து சாதம் போலவும், தாவா வெஜ் நன்றாக வெந்தும், சில்லி பன்னீர்-ல் மிள்காய் எஃபெக்ட் குறைவாகவும், மொத்தத்தில் ருசியாக இருந்தது.
1947-ல் துவங்கிய நிறுவனம் சக்கைப் போடு போடுவதாய் உணவக ஊழியர் சொன்னார். இன்னும் கொஞ்ச நேரத்தில் இடமே கிடைக்காது என்று பெருமை பேசினார். ‘எவ்ளோதான் இருந்தாலும் இந்திய உணவை எங்களால்தான் தர முடியும்’ என்று பெருமை பேசினார்.
1935-ல் ஜலந்தர் இளைஞன் நம்பிக்கையுடன் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இறங்கி, 1947-ல் லோதியான் ரெஸ்டாரெண்ட் என்கிற பெயரில் துவங்கி, அந்நாளைய இந்திய மாணவர்களுக்கு (எடின்பரோ பல்கலைக்கழகம்) உணவிடும் புண்ணியத்தைச் செய்தான் என்று உணவகத்தின் குறிப்பு கூறுகிறது. கூடுதல் சுவாரஸ்யம் அந்த இளைஞருக்கு இங்க்லீஷ் வராது. எழுதப் படிக்கத் தெரியாது.
அது சரி, செவிக்கு விருந்து படைக்கும் இசைக்கும், வயிறுக்கு அமுது படைக்கும் விருந்துக்கும் மொழி வேண்டுமா என்ன?
பி.கு :
1. ரெண்டு குலோப்ஜாமூன்களின் விலை, அதிகமில்லை ஜெண்டில்மேன்! ஐந்து பவுண்டுகள் :-)
2. லீத் வாக் ஜங்ஷனில், உணவகத்தின் எதிரே அழகாய் அமைந்திருக்கும் கட்டிடம் பிடித்திருந்ததால், (புகை) பிடிக்கப்பட்டு இதோ...

No comments:
Post a Comment