1. நான் அவளைப் பார்த்தேன்
அவள் என்னைப் பார்த்தாள்
'குழந்தையை தூக்கிகிட்டு நடங்க' என்றாள்..
2. என்ன யோசனை?' என்றாள்.
ஐஸ்க்ரீம் அப்பிக்கொண்ட
சிறுமியைக் காட்டினேன்...
'அட' என என்னவள் சிலாகித்துத்
தலையைக் கோதியதில்,
சிறுமி விரல் கோத்து நின்ற
அழகிய அம்மணி மீதான
கவனம் கலைந்து போனது..
3. சொல்லாமல் சொல்லி
கொல்லாமல் கொன்று
நில்லாமல் சென்றாயடி!
-எழுதியதை எட்டிப் பார்த்த
என்னவளின் கேள்வி
'எவ அவ?'
4. கன்றாய்த் துள்ளித் திரிந்த கட்டிளங்
கன்னியிடம் 'கேட்டு' வாங்கியதில்
கன்றிச் சிவப்பாய்ப் பூத்துப் போன
கன்னம் - காளையின் அவமானச் சின்னம்...
5. 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேச கூடாதா?'
'தள்ளிப் படுங்க!
குழந்தை முழிச்சிக்க போவுது!'
அவள் என்னைப் பார்த்தாள்
'குழந்தையை தூக்கிகிட்டு நடங்க' என்றாள்..
2. என்ன யோசனை?' என்றாள்.
ஐஸ்க்ரீம் அப்பிக்கொண்ட
சிறுமியைக் காட்டினேன்...
'அட' என என்னவள் சிலாகித்துத்
தலையைக் கோதியதில்,
சிறுமி விரல் கோத்து நின்ற
அழகிய அம்மணி மீதான
கவனம் கலைந்து போனது..
3. சொல்லாமல் சொல்லி
கொல்லாமல் கொன்று
நில்லாமல் சென்றாயடி!
-எழுதியதை எட்டிப் பார்த்த
என்னவளின் கேள்வி
'எவ அவ?'
4. கன்றாய்த் துள்ளித் திரிந்த கட்டிளங்
கன்னியிடம் 'கேட்டு' வாங்கியதில்
கன்றிச் சிவப்பாய்ப் பூத்துப் போன
கன்னம் - காளையின் அவமானச் சின்னம்...
5. 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேச கூடாதா?'
'தள்ளிப் படுங்க!
குழந்தை முழிச்சிக்க போவுது!'
No comments:
Post a Comment