Monday, July 08, 2013

பத்மனுக்கு* ஒரு கடிதம் (அ) பரதேசி டைரிக் குறிப்பு - 46

அன்புள்ள பத்மனுக்கு,

நேற்று எடின்பரோவிற்கு வந்து விட்டேன் (மூன்றாவது முறையாக).  ‘ஆண்டி முர்ரே வெற்றிச் செய்தி’ வேப்பங்காயாய் வரவேற்றது :-)

லண்டனும், எடின்பரோவும் 24-களில் ‘சொல்ப’ வெப்பமாய் இருந்தது ஆறுதல்.

என்று ‘அண்டர்வேர் இல்லாமல் இருக்கலாம், ஆண்ட்ராய்ட் இல்லாமல் இருக்கக்கூடாது’ என்று எழுதினேனோ தெரியவில்லை. 
இப்போ அண்ணன் செம்ம கிங்-குடன் ஆண்ட்ராய்ட் 4.1.2-வில் குட்டியூண்டு GS5282 ஸாம்ஸங்-கு!

சத்யப்ரகாஷ் ராஜேந்திரன் போல 'எனக்கு நானே' புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தேன்.  எடுத்தேன்.  பார்க்க எனக்கே பயமாயிருந்தது.  அதனால் இணைக்கவில்லை.

என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 0-XXX-XXX-XXX7 (நம்பரை இங்கே கொடுத்தா பொண்ணுங்க தொல்லை ஜாஸ்தியாவும்-னு தம்பி மருதன் ஃபீல் பண்ணுவாரு, அதான் கொடுக்கலை).  நாம் பேசி வைத்தது போல ’லைக்கா’ மொபைல் இணைப்புக்கு ஒரு லைக் போட்டாச்ச!

என்றும் அன்புடன்,
பருப்பு ஆசிரியன்

*பத்மன் என் அலுவலக நண்பர்.  இதில் வரும் நபர்கள் எல்லோரும் என் அலுவலக நண்பர்கள்.

1 comment:

JK said...

Illena udane number kuduthu,udane phone,peai kizichiduvaaru....

seri seri un numbers anumgaanum