Tuesday, July 09, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 47

எச்சரிக்கை# 1: டைரிக் குறிப்பு என்பதால் தினமும் எழுதி உங்களைப் படிக்க வைத்து, லைக் போட வைத்துப் படுத்தலாம்.

எச்சரிக்கை# 2: வேலைப்பளு அதிகமாகும்போது குறிப்பேதும் விடாமல், உங்களைச் சந்தோஷப் ‘படுத்தலாம்’.


எடின்பரோவில் ரெண்டாவது நாளா ’வெள்ளக்கார’ பாஷைல வெயில் கொளுத்தறது.  அதிகமில்லை லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் - சென்னைக்கு ரொம்பப் பக்கத்துல இருக்கே பெங்களூரு..அந்த வெதர்தான்.  வெயில் ஜாஸ்தியானதால வளர்ந்த பொண் கொழந்தைகள், அவாளோட அம்மா, அந்த அம்மாக்களோட அம்மா எல்லாரும் கூலர்ஸ் மாட்டிண்டு, லூஸா ட்ரெஸ் போட்டுண்டு, பிரின்ஸஸ் ஸ்ட்ரீட்ல ஹாயா சுத்தறது நம் கண்ணுல பட்டு, நம் மனசைக் காயப்படுத்தறது.  இவாளை இப்படிப் பாக்கும்போது ஆத்து மாமி வேற (வேறா??) ஞாபகத்துக்கு வர்றா (‘ஏன்னா! உங்களை வேலையைப் பாக்கத்தானே அனுப்பிச்சேன்..நீங்க வேற எதையெல்லாமோ பாக்கறேளே - ன்னு ரொம்பச் சாதுவாதான் கேப்பா...பதிலே சொல்ல முடியாது).



இப்படித்தான் நேத்து என்னோட வேலை செய்யற அருள் (தமிழ்தான்!) தம்பியோட மெக்-டி போய் க்யூவுல நின்னேன்.  எனக்கு முன்னாடி இருந்த ஜோடி ‘ஆளே இல்லாத மாதிரி’ வேலை பண்ணிண்டிருந்தா.  அவ்வளவு கூட்டத்திலேயும் வேலை ஜரூரா நடந்துண்டிருந்தது.

இத்த விடுங்க.  ரெண்டு நாள்ல ரெண்டு வீடு மாறியாச்சு.  ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்லேந்து, ஸிங்கிள் பெட்ரூமுக்கு ஷிப்ட் ஆயிட்டேன் (சிங்கம் ஸிங்கிளாத்தான் இருக்கும்னு காமெண்ட்டெல்லாம் போடக்கூடாது).  மேற்கே பாத்து இருக்கறதால  வெயில் பளீர்னு ராத்திரி எட்டரைக்கு வரைக்கும் அடிக்கறது.

ஜன்னல் வழியா பாத்தா பார்க் தெரியறது.  வயசானவா (ஆம்பிளைங்கதான் ஸ்வாமி) எல்லாம் பந்தை உருட்டிண்டு வெள்ளாண்டிருக்கா (பவுலிங்காம்).  எங்கப் பாத்தாலும் பச்சைப் பசேல்னு இருக்கு.  ஹலோ! நான் - மரம், செடி, புல் - பத்திதான் பேசறேன்.  ஆக, சின்ன வீடு (பெங்களூரு ஆத்தை கம்பேர் பண்ணா இது சின்னது ஓய்!) ‘சப்பக்’னு மனசுல ஒட்டிண்டுடுத்து.

பொன் கெடச்சாலும் புதன் கெடக்காதுன்னு சொல்லுவா.  அதனால, நாளைக்கு சாயாங்காலத்துலேந்து ஆத்துலேயே ‘பொங்கி’த் தின்னறதா முடிவு பண்ணிட்டேன்.

மத்ததை நாளைக்கு பார்ப்பமே...

1 comment:

JK said...

Padha padha mothamum padhai....naan enakku pidicha niratha,Sonnen....