Showing posts with label காஞ்சி பெரியவர். Show all posts
Showing posts with label காஞ்சி பெரியவர். Show all posts

Saturday, March 20, 2010

ந-ன !

'ந-ன இரண்டும் ஒரே சப்தமாகத்தானே இருக்கு? எதற்கு இப்படி இரண்டு எழுத்து?' என்று ரொம்ப பேருக்குத் தெரியவில்லை. வாஸ்தவத்தில் அவை வித்யாஸமான சப்தங்கள்தான்.

'ந' என்கிறபோது நாக்கு நுனி பல்லும் மேலண்ணமும் சேர்கிற இடத்துக்குக் கிட்டே பல், அண்ணம் இரண்டையும் தொடணும். 'ன' என்கிறபோது நாக்கு நுனி இன்னும் வளைந்து அண்ணத்தின் உள்பக்கமாக மட்டும் தொடணும்.

'அந்த' என்று சொல்லிப் பாருங்கள். அப்போது 'ந்'-னில் நாக்கு எங்கே தொடுகிறதோ அங்கேதான் 'ந' வரிசை பூராவிலும் தொடணும். 'அவன்' என்கிறபோது 'ன்'-னில் நாக்கு தொடுகிற இடத்திலேயே 'ன' வரிசை பூரா தொடணும். இது தமிழுக்கே உரியதான சப்தம்...

'ந' பல்லை நாக்கு தொடுகிற dental; 'ண' அண்ணத்தைத் தொடுகிற cerebral. தமிழில் மட்டும் உள்ள 'ன'வும் cerebral மாதிரிதான். 'ந'வுக்கும் 'ண'வுக்கும் நடுவிலுள்ள இடத்தைத் தொட்டால் உண்டாகும் சப்தம்.

-காஞ்சி மஹாபெரியவர், தெய்வத்தின் குரல்

Saturday, December 19, 2009

நட்பு

நட்பு என்பது நம்பிக்கைக்குரியதா? நம்பிக்கை தருவதுதான், ஓரளவுக்கு. பால்ய நட்பு, பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, உத்யோக நட்பு, அக்கம் பக்கம் வசிப்பதால் வரும் நட்பு, என்று எத்தனையோ தினுசு இருந்தாலும், எதை எந்த அளவுக்கு நம்பலாம் என்று ஆராய்ந்தால், ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்டர், ஓர் எல்லைக்கோடு வந்து விடுகிறது.

இயற்கை எப்படி என்றால், எது ஒன்று ரொம்ப உச்சமாயிருக்கிறதோ, அது மாறினால், படு மோசமாகிவிடும். நல்ல பழம் அழுகிவிட்டால் சகிக்க முடியாமல் நாற்றமெடுக்கிறது. சுத்தமான நெய் கெட்டுப் போனால் வயிற்றைப் புரட்டுகிறது. கள்ளிச் சொட்டு மாதிரியான பால், துளி அந்நிய வஸ்து சேர்ந்து போனால், கட்டி கட்டியாகத் திரிந்து எதற்குமே பயன்படாமல் போய்விடுகிறது.

இப்படித்தான் அத்யந்த சிநேகிதத்தில் கொஞ்சம் எங்கேயாவது விரிசல் ஏற்பட்டுப் போனால், அது பரம விரோதமாகிவிடுகிறது. அதிப்ரியம், அதிலே அடைகிற இன்பம், கொஞ்சம் பங்கப்பட்டாலும் பரம த்வேஷம், கோபம், துக்கம் என்றாகி விடுகிறது. தலைகீழாகி விடுகிறது. கவி காளிதாஸனுக்கும் போஜ ராஜனுக்கும் இருந்த நட்பு, பின்பு விரோதமாகிவிட்டதைப் போல, கம்பன் கதையும் இப்படித்தான். திருமலை நாயக்க மன்னனுக்கும் நீலகண்ட தீக்ஷ¢தருக்கும் இருந்த நட்பும் அதே தான்.

ஆக, நட்பு என்பதும் வாழ்க்கையில் நம்பக் கூடியதுதான். ஆனால் ஒரு ஸ்திதியோடு, தானே நின்று கொண்டு வளர்க்கலாமேயொழிய, ரொம்பவும் நெருங்கிப் போய் உரிமை கொண்டாடலாகாது.

-காஞ்சி பெரியவர்