Showing posts with label எடின்பரோ குறிப்புகள். Show all posts
Showing posts with label எடின்பரோ குறிப்புகள். Show all posts

Sunday, July 14, 2013

(ஓடும்) பரதேசி டைரிக் குறிப்பு - 50

எச்சரிக்கை# 4 : வெள்ளி, சனி கிழமைகளில் ப.டை.கு வெளிவராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்   (மீதி மூன்று எச்சரிக்கைகள்? - அட! தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே!)




புகழ் பெற்ற அந்த இந்திய வீரரின் பெயர் தெரியும்.  தங்கப் பதக்கம் ஹாக்கி விளையாட்டில் வாங்கியிருக்கிறார் என்று மட்டும் (தவறாக!) அறிந்திருந்தேன்.  அவரைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வெள்ளி இரவு கிடைத்தது.

Sunday, February 10, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 41

பாஸேஜ் ஆஃப் இந்தியா என்கிற பஞ்சாபி வகை உணவகம் லீத் வாக் (Leith Walk) பகுதியில் உள்ளதை முதல் நாள் நடைப் பயணத்திலேயே குறித்துக் கொண்டேன்.


சனியன்று மதியம் 12 மணிக்குப் போனால்... திறக்கவேயில்லை. ’சரி, பக்கத்தில் குஷி'ஸ் என்கிற உயர்தர விலை உணவகம் இருக்கிறதே! அங்கு போகலாமே!’ (அட! இதை அன்னிக்குக் கவனிக்கவே இல்லையே!)

பரதேசி டைரிக் குறிப்பு - 40

பில் ரிக் ஸ்ட்ரீட் கெஸ்ட் ஹவுஸிலிருந்து, லோதியான் ஸ்ட்ரீட் அலுவலகம் இரண்டரை மைல் தூரம் இருக்கலாம். போய் வர நகரப் பேருந்துகள் உண்டு. 15 நிமிடப் பயணம். ஆக, எடின்பரோ நகரத்தின் முக்கிய அம்சம் லோதியான் பேருந்து.

பெங்களூரு வோல்வோ, வாயு வஜ்ரா வகைப் பேருந்துகள் சிசிடிவி / டபுள் டெக்கர் பட்டையைக் கெளப்பிக்கொண்டு, மழலைத் துடிப்புடன் அங்குமிங்கும் வழுக்கிக் கொண்டு ஓடுகின்றன.



பரதேசி டைரிக் குறிப்பு - 39




எடின்பரோவின் பிரின்ஸஸ் ஸ்ட்ரீட் சென்னை பாண்டி பஜார், பெங்களூர் ப்ரிகேட் ரோடு, நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் போல. சனிக்கிழமை கூட்டம் அநியாயத்துக்குப் பிதுங்குகிறது. கூடுதல் வசீகரம் ரக்பி பந்தயம்.