Showing posts with label PDK. Show all posts
Showing posts with label PDK. Show all posts

Sunday, July 14, 2013

(ஓடும்) பரதேசி டைரிக் குறிப்பு - 50

எச்சரிக்கை# 4 : வெள்ளி, சனி கிழமைகளில் ப.டை.கு வெளிவராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்   (மீதி மூன்று எச்சரிக்கைகள்? - அட! தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே!)




புகழ் பெற்ற அந்த இந்திய வீரரின் பெயர் தெரியும்.  தங்கப் பதக்கம் ஹாக்கி விளையாட்டில் வாங்கியிருக்கிறார் என்று மட்டும் (தவறாக!) அறிந்திருந்தேன்.  அவரைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வெள்ளி இரவு கிடைத்தது.

Wednesday, July 10, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 48

நேற்று போட்ட எச்சரிக்கைகளை மீண்டும் இடுகிறேன்.

எச்சரிக்கை# 1: டைரிக் குறிப்பு என்பதால் தினமும் எழுதி உங்களைப் படிக்க வைத்து, லைக் போட வைத்துப் படுத்தலாம்.

எச்சரிக்கை# 2: வேலைப்பளு அதிகமாகும்போது குறிப்பேதும் விடாமல், உங்களைச் சந்தோஷப் ‘படுத்தலாம்’.

ஏற்கெனவே இன்றைக்குப் பொங்கித் தின்பது முடிவாகி விட்டது என எழுதியிருந்தேன்.  அதே போல அலுவலக நண்பர், மூத்தவர் திரு பத்மநாபன் ராமானுஜன் அவர்களின் துணையோடு ஜியார்ஜியில் உள்ள அம்மாஸ் ஸ்பைஸி என்கிற இந்தியக் கடைக்குச் சென்றேன்.

Tuesday, July 09, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 47

எச்சரிக்கை# 1: டைரிக் குறிப்பு என்பதால் தினமும் எழுதி உங்களைப் படிக்க வைத்து, லைக் போட வைத்துப் படுத்தலாம்.

எச்சரிக்கை# 2: வேலைப்பளு அதிகமாகும்போது குறிப்பேதும் விடாமல், உங்களைச் சந்தோஷப் ‘படுத்தலாம்’.


எடின்பரோவில் ரெண்டாவது நாளா ’வெள்ளக்கார’ பாஷைல வெயில் கொளுத்தறது.  அதிகமில்லை லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் - சென்னைக்கு ரொம்பப் பக்கத்துல இருக்கே பெங்களூரு..அந்த வெதர்தான்.  வெயில் ஜாஸ்தியானதால வளர்ந்த பொண் கொழந்தைகள், அவாளோட அம்மா, அந்த அம்மாக்களோட அம்மா எல்லாரும் கூலர்ஸ் மாட்டிண்டு, லூஸா ட்ரெஸ் போட்டுண்டு, பிரின்ஸஸ் ஸ்ட்ரீட்ல ஹாயா சுத்தறது நம் கண்ணுல பட்டு, நம் மனசைக் காயப்படுத்தறது.  இவாளை இப்படிப் பாக்கும்போது ஆத்து மாமி வேற (வேறா??) ஞாபகத்துக்கு வர்றா (‘ஏன்னா! உங்களை வேலையைப் பாக்கத்தானே அனுப்பிச்சேன்..நீங்க வேற எதையெல்லாமோ பாக்கறேளே - ன்னு ரொம்பச் சாதுவாதான் கேப்பா...பதிலே சொல்ல முடியாது).

Monday, July 08, 2013

பத்மனுக்கு* ஒரு கடிதம் (அ) பரதேசி டைரிக் குறிப்பு - 46

அன்புள்ள பத்மனுக்கு,

நேற்று எடின்பரோவிற்கு வந்து விட்டேன் (மூன்றாவது முறையாக).  ‘ஆண்டி முர்ரே வெற்றிச் செய்தி’ வேப்பங்காயாய் வரவேற்றது :-)

லண்டனும், எடின்பரோவும் 24-களில் ‘சொல்ப’ வெப்பமாய் இருந்தது ஆறுதல்.

என்று ‘அண்டர்வேர் இல்லாமல் இருக்கலாம், ஆண்ட்ராய்ட் இல்லாமல் இருக்கக்கூடாது’ என்று எழுதினேனோ தெரியவில்லை.