Showing posts with label எஸ் பி எம். Show all posts
Showing posts with label எஸ் பி எம். Show all posts

Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - III


ரஜினி டூயட்ஸ் - 7

இந்தப் பாட்டும் பசுமையான பாட்டுதான். ஆறிலிருந்து அறுபது வரை ரசிக்கும் பாட்டுதான். இளையராஜா / கண்ணதாசன் / எஸ் பி பி/ஜானகி இணைப்பில் ரஜினி/சங்கீதா பாடும் காதல் பாட்டுதான். செட், ஜிகினா, பள பள உடைகள் கூடிய டிப்பிகல் எஸ் பி எம் பாட்டு. ரஜினி சார் 'கொஞ்சம்' வித்யாசம் காட்டிருப்பார் இந்த பாட்டுல, என்னவா? கண்டுபிடிங்களேன்...!


ரஜினி டூயட்ஸ் - 8

ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி போட்டு நடித்த 'நதியோரம்' பாட்டு உங்களுக்குத் தெரியுமா? இசைஞானியின் மெலடிகளில் நிச்சயம் வந்து விழும் பாட்டு 'நதியோரம்'. ரஜினி 'இஷ்டைல் / டிரஸ்' எல்லாமே பிரமாதமாய் இருக்கும். கொஞ்சம் நெருக்கமாய், கதாநாயகியை இறுக்கமாய்க் கட்டிப் பிடிக்கும் பாடல்! அன்னை ஒரு ஆலயம் படத்தில், வாலி வரிகளில், நடுவே வரும் 'லு லு லு'வில் ..'நதியோரம்'...அபாரம்!


ரஜினி டூயட்ஸ் - 9

உரசினாலே இன்பம்தானே...! அதுவும் மனதிற்குப் பிடித்தவளோடு உரசுவது என்றால்? இன்பத்திற்குக் கேட்கவா வேண்டும்...தலைவர் / ரதி இருவரும் 'உரசி'கொண்ட பாடலை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா...? ஓரக்கண்ணால் பார்ப்பது, தலையைக் கோதிக்கொள்வது, ஆடுவது என எல்லாவற்றிலும் ரஜினி சாரின் மானரிசம் அதிகம் கொண்ட பாடல்! 'அன்புக்கு நான் அடிமை' படத்தில், எஸ் பி பி / சுசீலாம்மா குரல்களில், இசைஞானி இசையில், வாலி வரிகளில், 'ரஜினி சார் டூயட்டை இன்னிக்கெல்லாம் கேட்டுண்டே இருக்கலாமே?!'


-தொடரும்

Thursday, September 08, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 2


இனி....

'போதுமா முத்தம்'? அதுவும் நம் கமலுக்கு??! புதுமுக ஷோபனாவுடன் இரவில், வெளியிலா/உள்ளிலா என யூகிக்க முடியாத தளத்தில், இளையராஜா இசையில் எஸ் பி பி, ஜானகி பாடிய பாடலில் 'போதாதே, முத்துச்சரம், நாணுமே, விதிவிலக்கு, காமம் வண்டு' எனச் சரளமான வார்த்தைகளில் வரும் 'சத்தம் போடாத முத்தம்'...அந்நாளைய தொலைக்காட்சியில் 'சென்சார்' செய்யப்பட்டாலும், 'சப்பக்' பாடல் நான்கில்....ரசம் சற்றுக் 'சப்'தான்!


சாதாரணமான கமல், 'பால் நிலா ராத்திரி, பாவை ஓர் மாதிரி' என்று அழைத்தால் 'சுஸ்த்'தாகி...'அழகு ஏராளம்...' என்று பின்னாடியே வந்துவிட மாட்டாரா...?! தர்மாவதி ராகத்தில்...இளையராஜாவின் கொஞ்சும் இசையில்...எஸ் ஜானகி, எஸ் பி பி குரல்களில்....'மீண்டும்...மீண்டும் வா' என்று டிம்பிளை அழைத்துக் 'கதாநாயகியாய்'த தொடங்கி வைத்தது...இன்று 'வடக்கு இறக்குமதி'யைச் சர்வ சாதாரணமாக்கிவிட்டது...! 'சரசக்கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது' என் வரிகள் சொன்னாலும்....'பச்சக்' ஐந்தாகிவிட்டதே ராஜசேகரய்யா..!.


'என்ன சத்தம் இந்த நேரம்?' என்கிற அதட்டலான தொனி கூட 'மன்னர்' கமலின் நடிப்பில் மென்மையாகி, நம்மைப் 'புன்னகை' க்க வைக்கிறதை நினைத்தால்....அடடா! கடலோரக் கவிதையுடன், பொங்கும் அருவியின் பின்னணியில், தாலாட்டும் இசையில், எஸ் பி பி மென்மையில்....கமலின் குரலினூடே அமைந்த இந்தப் பாடல்....'நெருக்க்க்கக்' காதலர்களுக்கு என்றும் பொருந்தும், கமல் ஸாருக்கு மட்டுமே அமையும் 'பச்சக்' பாடல் ஆறு...!



-'பச்சக்' தொடரும்!

Wednesday, August 31, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 1

அன்றும் இன்றும் கமலஹாசன் அவர்கள் என்றால் நினைவுக்கு வருவது 'நடிப்பு' மற்றும் 'முத்தம்' (?!). மூன்று முறை தேசிய விருது பெற்றாலும், 'சிருங்காரம்' என அழகுத் தமிழில் அழைக்கப்படுவதைத் தனது படங்களில் செருகுவதைக் குறைத்துக் கொண்டதேயில்லை. சராசரி மனிதர்களை பெருமூச்சு விட வைத்தாலும்.... பாடல்களில் ஒரு க(ம)லை நயம் இருப்பதை யாராலும் மறுக்க / மறக்க முடியாது!

அது சரி 'சப்பக்' (அ) 'பச்சக்' என்றால் என்னபா? சரியான பதிலைத் தர மூன்று பேர் மட்டுமே உண்டு...

அரபு வாசகர் எனது அருமை 'பெரியண்ணா' திரு சங்கர் அவர்கள்...
சென்னை வாசகர், அருமை நண்பர், கவிஞர் திரு ஜே கே அவர்கள்...
சென்னை வாசகர், அருமை நண்பர், திரு தியாகராஜன் அவர்கள்...

ஏனையோர்களும் முயற்சி செய்யலாம்!

கமலின் பொன்மேனி சிலுக்காய் உருகுவதைப் பார்த்து ரசிக்காதவர்கள் இங்குண்டோ? 1983-ல் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய மூன்றாம் பிறை காவியத்தின் களங்கம். கமல தனது மெல்லிய நடன அசைவில், சிலுக்கைத் தூண்டுவது போல, 'ஐஸ்' ஜானகி குரலில் அமைந்திருக்கும் பாடல்..அடடா! இளையராஜா இசையில், ஊட்டி குளிரில், ஆடை குறைந்த, அவுட்டோரின் தெகிரிய ஒளிப்பதிவில் இதோ வருகுது 'பச்சக்' பாடல் ஒன்று....


மீண்டும் நிலா...இந்த முறை முழுமையாகக் காயுது..! வேறு யாராய் இருந்தாலும் ஆபாசமாய்ப் போயிருக்கும் பாடலைக் கமல் ஆள்வதைப் பார்க்கும்போது...மனிதருக்கு 'நேரம் நல்ல நேரம்' என்றுதான் நினைக்கத் தோன்றும். களத்துமேட்டை ஸ்டுடியோவுக்குள் அடக்கி, atmosphere-ஐக் கொணர்ந்து (அந்தக் காலத்தில் அப்பிடிதான் எடுப்பார்களாம்!), நெருக்கத்தைப் படம் பிடித்திருக்கும் எஸ் பி எம் அய்யா....பிடியுங்கள் 'சப்பக்' பாடல் இரண்டை...


'காயும் நிலா'வை வீணாக்காது 'பூவெடுத்து வைக்கும்' கமல்....ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் பல சர்ச்சைகளுக்கு பின் வெளி வந்த, வந்த வேகத்தில் உள்ளே போன படம்...இதுவும் இண்டோரில் எடுக்கப்பட்டது...இதுவும் அம்பிகாவோடு....'பூவெடுத்து' கமல் பின்னால வைத்தால் 'சொக்காமல்' இருக்க முடியுமா என்ன?! ....எஸ் பி பி குழைவில், எஸ் ஜானகி நெருக்கத்தில், மயக்கும் இசையில் அநேகருக்குத் தெரியாத 'சப்பக்' பாடல் மூன்று...


-'பச்சக்' தொடரும்!

Friday, December 25, 2009

பைப்பும் எம் ஆர் ராதாவும்!

இயக்குனர் திருலோகச்சந்தர் அவர்களுக்கு 'பைப்' பிடிக்கும் பழக்கும் உண்டு. அதைப் பார்த்த எம் ஆர் ராதா ஒரு நாள் எஸ் பி எம்மிடம் கேட்டார்

"உங்க டைரக்டர், சிவாஜி, எம் ஜி ஆர் இருக்கும்போதுகூட அவங்க எதிரில் 'பைப்' ஸ்மோக் பண்ணுவாரா?"

'ஓ..பண்ணுவாரே' என்றார் எஸ் பி முத்துராமன்.

'இவன்தான்யா டைரக்டர். சில பேர் மறைஞ்சு மறைஞ்சு பிடிப்பாங்க. ஏன் அப்பிடி ஒளியணும்...பைப் பிடிக்கிறோம்னு பழக்கமாயிடிச்சு...அப்புறம் என்ன? நேரா பிடிக்க வேண்டியதுதானே?!' என்றார் எம் ஆர் ராதா !

ஏ வி எம் தந்த எஸ் பி எம் நூலில் இருந்து...