Showing posts with label முரட்டுக்காளை. Show all posts
Showing posts with label முரட்டுக்காளை. Show all posts

Sunday, January 30, 2011

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 4

சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் ரஜினியின் அறிமுகப் பாடல்கள் தொடர்கின்றன...

முந்தைய பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 1
ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 2
ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 3

இடம்# 07
பாடல்# 'பொதுவாக என் மனசு தங்கம்..'
படம்# முரட்டுக் காளை
இசை# இளையராஜா
பாடல்# பஞ்சு அருணாசலம்
பாடியவர்# 'மலேசியா' வாசுதேவன்

எந்த ஒரு கதாநாயகனுக்கும் தான் ஒரு வெகுஜன கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற ஆசை நிச்சயமாக இருக்கும். அது, மிகச் சிலருக்கே பொருந்தி வருகிறது. பொருந்துவதோடு நில்லாமல், தொடர்ந்து கொண்டே இருப்பது ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டும்தான். அதிலும், கமர்ஷியல் ஹீரோவுக்கான அறிமுகப்பாடல் மிக மிக முக்கியம்!

ரஜினி வெகுஜன கதாநாயகனாக முத்திரை பதித்த படம் 'முரட்டுக் காளை'. 'விக்' அணிந்து ரஜினி நடித்த வெகு சில படங்களில் ஒன்று. அதில் வரும் அறிமுகப் பாடல், அட்டஹாசமான பாடல்...

'பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!'

என்று துவங்கி, 'நெஞ்சுக்குள்ள அச்சமில்லை, யாருக்கும் பயமுமில்லை, வாராதோ வெற்றி என்னிடம்!', 'பொறந்த ஊருக்குப் புகழைச்சேரு, வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு', 'எந்நாளும் உழைச்சதுக்குப் பொன்னாக பலனிருக்கு' என்கிற வரிகளில் பஞ்சு அருணாசலம் மின்னியிருந்தார்.

அந்த வகையில் இந்தப் பாடல் 7-வது இடம்!